Pages

Saturday, 31 October 2015

‘தல’ தீபாவளி: ‘யு’ சான்றிதழுடன் நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் வேதாளம்

சென்னை: அஜீத்தின் வேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வேதாளம். இந்த படம் மூலம் முதல்முறையாக ஸ்ருதி ஹாஸன் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி முடித்தார்கள்.


ஆனால் ரிலீஸ் தேதியை மட்டும் உறுதி செய்யாமல் இருந்தார்கள். இந்நிலையில் வேதாளம் படம் சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் எங்கும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து படம் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த அஜீத் ரசிகர்கள் இந்த தீபாவளி தல தீபாவளி டா என்று அதை கொண்டாட தற்போதே தயாராகிவிட்டார்கள். வேதாளம் படத்தில் நடிக்கையில் காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. தற்போது அவர் ஸ்டிக் உதவியுடன் நடந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment