Saturday, 31 October 2015

அஜித் பட டீஸருக்கு விஜய் பாராட்டு – வேதாளத்துக்கே விக்கலெடுக்க வைத்த விஷமிகள்

கடந்த இரு தினங்களாக ஒரு செய்தி ஊடகங்களில் உலா வருகிறது. வேதாளம் டீஸரைப் பார்த்து விஜய் பாராட்டினார் என்பதுதான் அந்த செய்தி. விஜய் எங்கு பார்த்தார்? யாரை பாராட்டினார்? யாரிடம் பாராட்டை தெரிவித்தார்? இந்த விவரங்கள் எதுவுமில்லாமலே வதந்தி ஹாயாக உலா வந்தது (நாம் அந்த செய்தியை போடவில்லை என்பது முக்கியமானது).

அஜித்தும் விஜய்யும் நட்பாதான் இருக்காங்க, ரசிகர்கள்தான் அடிச்சிக்கிறாங்க என்று, இந்த செய்தியை முன்வைத்து அட்வைஸ் மழைகளும் பொழிந்தன. இந்த களேபரத்துக்கு காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
சதுரங்கவேட்டை ட்ரெய்லரை விஜய் பாராட்டிய புகைப்படத்தில் சதுரங்கவேட்டை படத்தை எடுத்துவிட்டு வேதாளம் படத்தை ஏதோ விஷமி விவரமாக மாற்றியதன் பக்க விளைவுதான் இந்த போலிச் செய்தி.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டரை எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தடை செய்யணும் சாமியோவ்.

No comments:

Post a Comment