ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் படமே “இஞ்சி இடுப்பழகி” தெலுங்கில் “சைஸ் ஜீரோ” என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நாசர், மோகன்ராஜா, மதன்கார்க்கி, அனுஷ்கா, ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். நாசர் பேசும் போது இவ்விழாவிற்கு நான் நடிகர் சங்கத் தலைவராகவோ, ஒரு நடிகராகவோ வரவில்லை. ஓரு அப்பாக வந்திருக்கிறேன். என்னுடைய மகள் அனுஷ்காவிற்காக வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு என்னிடம் கதையைக் கூறி இந்தப் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று கூறினார்.
படத்தின் பொருட்செலவைப் பொருத்து ஒப்பனைக் கலைஞர்களின் மூலம் உடல் எடையை கூட்டியது போல தோற்றம் கொண்டுவந்துவிடலாம் என்று கூறினேன். அதுவெல்லாம் வேண்டாம் சார், நான் உடல் எடையையே கூட்டப்போகிறேன் என்று கூறினார். எடையைக் கூட்டி அந்த பாத்திரத்தை உணரப் போகிறேன் என்று என்னிடம் ஆர்வத்துடன் தெரிவித்தார் அனுஷ்கா. அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதையை அது காட்டுகிறது. அதுபோல், ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். அவருடன் நடித்தது எல்லாம் மறக்கமுடியாது என்று கூறினார். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் மரகதமணி தான். இளையராஜாவுக்கு இணையான ஓர் இசையை அவர் வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல படங்கள் சாட்சியாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment