Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Saturday, 9 January 2016

அமீர் இயக்கத்தில் ராணா நடிக்க வாய்ப்பு


அமீர் இயக்கும் புதிய படத்தில் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்'ஆகிய படங்களை இயக்கிய அமீர் 'யோகி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் 'ஆதிபகவன்' திரைப்படத்தை இயக்கினார். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
சமீபத்தில் வி.இசட். துரை இயக்கவிருக்கும் புதிய படத்தில் அமீர் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்நிலையில், நடிப்பதோடு மட்டுமல்லாமல், அமீர் ஒரு புதிய படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார். 'பாகுபலி' படத்தில் ராணாவின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டதால், ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Monday, 9 November 2015

‘Thoongavanam’ (Thoongaa Vanam) Movie Review

தூங்காவனம் – விமர்சனம்
தூங்காவனம் – விமர்சனம் - actoractressin
பரபர ஆக்‌ஷன், நடந்தது என்ன என்பதே தூங்காவனம் படத்தின் ஒன்லைன்..
ரொம்ப நல்ல கெட்ட போலீஸாக கமல் ஹாசன். வழக்கமான நேர்மை, உண்மை, கடமை என எதுவுமின்றி பணம் இருந்தால் மார்க்கம் உண்டு பாணி ஆள். அவர் கையில் கிடைக்கிறது விலைமதிப்புள்ள போதைப்பொருள். பணத்திற்கு ஆசைப்பட்டு மிக லாவகமாக மறைத்து வைக்கிறார் கமல். இடையில் கமலின் ஆசை மகன் கடத்தப்பட யார் கடத்தினார்கள். ஏன் கடத்தினார்கள். யார் கடத்தினார்கள், எதற்கு கடத்தினார்கள் மகன் கிடைத்தானா இல்லையா? என்பது மீதிக் பரபர க்ளைமாக்ஸ்.
விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு இடையில் வந்த இரண்டு படங்களுமே குடும்பம், செண்டிமெண்ட் என கொஞ்சம் வேறு கதைக்களமே. ஆனால் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். த்ரிஷா முதல்முறையாக போலீஸாக நடித்துள்ளார்.
த்ரிஷாவின் கேரக்டருக்காக பேசப்பட்ட படங்களில் இந்தப் படத்திற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இவர்கள் இருவரையும் விடவும் நடிப்பிலும், கவுண்டர்களிலும் அப்லாஸ் அள்ளுகிறார் பிரகாஷ்ராஜ். கமலை உக்காந்த இடத்திலிருந்து கொண்டு ஆட்டிப்படைத்திருக்கிறார்.
ஆஷா சரத் அவ்ளோ பெரிய நடிகையாக பாபநாசம் படத்தில் அறியப்பட்டவர் இந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் காட்டியது சற்றே ஏமாற்றம். கிஷோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.
அதிலும் அது ரொமான்ஸோ அல்லது காதல் பாடலாகவோ இல்லாமல் இருப்பது தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டத்தைக் காட்டுகிறது. பின்னணி பக்கா அதிரடி.. ஒர் இரவு எப்படிப் போகுமோ அதே வேகம் படம் முழுக்க. முன்பாதி அதற்குள் முடிந்துவிட்டதா பாணியில் இருக்கிறது. பின் பாதியில் கொஞ்சம் வேகம் குறைவு தான் எனினும் கதை விவரிக்க அந்த கதை நகர்வு அவசியமான ஒன்றாகவே படுகிறது.
ரீமேக் தான் ஆனால் கமல் படம் எனில் அது வேறு தான் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று. ஆளவந்தான் படத்திற்குப் பிறகு தீபாவளியன்று வெளியாகும் கமல்ஹாசன் படம். அதுவே ஒரு சிறப்பு.. எனில் ஆக்‌ஷன் வேட்டையில் மீண்டும் ஸ்டைலிஷ் கமல்ஹாசன். கண்டிப்பாக கமல் பிரியர்களும் சரி, ரிமெக் பிரியர்களும் சரி தவறவிடக்கூடாத படம் இந்தத் தூங்காவனம்.

அஜித்தின் “வேதாளம்” திரை விமர்சனம்!


சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.
வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.
கொலைகார குடும்பத்துடன் சம்மதம் வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.
லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார்? எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
வீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார்.  இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல்.

Thursday, 5 November 2015

Video: திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து

திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து, தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுக்க பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.
இன்று (புதன்) காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்டஸ்டாலின், அங்கிருந்து மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மாணவ மாணவிகள் எழுந்து குறைகளையும், அவருக்கு சில ஆலோசனைகளையும் கூறினர்.
அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசினார். கலந்துரையாடலின் நடுவே நிவேதிதா எனும் மாணவி எழுந்து, ஸ்டாலினிடம் ஒரு குவாட்டர் பாட்டிலை நீட்டி, "ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கான சிறப்பு பொருட்களை உங்களுக்கு பரிசாக கொடுத்திருப்பாங்க. எங்க ஊர்ல சாராயம்தான் பிரபலம். இதனால்தான் எங்கப்பா செத்துப்போனார். சிறியவர், பெரியவர், பெண்கள் என்று யார் கேட்டாலும் சாராயம் கிடைக்கிறது. நீங்க ஆட்சிக்கு வந்தால் உடனே மதுவிலக்கை கொண்டுவாங்க" என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தார்.
இதை பார்த்துத் திகைத்த ஸ்டாலின், அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி, "இதை முன்னரே நாங்கள் அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்குக் கொண்டு வருவோம்!" என்றார்.
கல்லூரி மாணவி மது பாட்டிலுடன் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமன்னாவின் தாறுமாறான ஆடை.

தமன்னாவின் தாறுமாறான ஆடை.





தமன்னா கவர்ச்சிக்கு மாறி ரசிகர்கள் தூக்கம் கெடுத்துள்ளார். பாகுபலி படத்தில் . அந்த படத்தில் ரவிக்கை அணியாமல் பாடல் காட்சியன்றில் வந்து பரபரக்க வைத்தார். அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கினார். ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடைகளில் வருகிறார்.
ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழா நிகழ்ச்சியன்றில் தேகம் முழுவதும் தெரியக்கூடிய வகையில் மெல்லிய ஆடை உடுத்தி வந்து கூட்டத்தினரை பரவசப்படுத்தினார். இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.
படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க டைரக்டர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். தமன்னாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இனிமேல் படங்களில் தொடர்ந்து அவரை கவர்ச்சியாக பார்க்கலாம்.

Monday, 2 November 2015

கதைக்கு தேவைன்னா ‘அப்படி’ நடிக்கவும் தயார் – லட்சுமி மேனனின் ஓபன் சவால்

Lakshmi Menon

கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிக்கவும் தயார் என்பது, எல்லா நடிகைகளும் ஏதாவது ஒருகட்டத்தில் உதிர்க்கும் பொன்மொழி. அனேகமாக மார்க்கெட் டல்லடிக்கும் நடிகைகளின் வாயிலிருந்து இந்த பொன்மொழி உதிரும்.
லட்சுமி மேனனுக்கு வாய்ப்புக்கு எந்தக் குறையும் இல்லை. அவரே அப்படியொரு ஸ்டேட்மெண்டைவிடுத்து தமிழ், கேரளா இரண்டு ஸ்டேட்டையும் அதிர வைத்திருக்கிறார். என்னவாம் விஷயம்…?
லட்சுமி மேனனுக்கு சிட்டி கேர்ளாக நடிக்கவே ஆசை. ஆனால் தொடர்ந்து அவரை கிராமத்து ரோல்களிலேயே நடிக்க வைக்கிறார்கள். லட்சுமி மேனனுக்கு கிளாமர் சரிவராது என்று நினைப்பதால்தான் கிராமத்து வேடமே அவருக்கு அதிகம் கிடைக்கிறது. அதனை உடைக்க விரும்புகிறார் லட்சுமி மேனன்.
நான் கிளாமராக நடிப்பேன், கதைக்குத் தேவை என்றால் நீச்சல் உடையில் நடிக்கவும் தயார் என்று இயக்குனர்களுக்கு அறிவிப்பு தந்திருக்கிறார்.
ம்… பேமிலி லுக்கை வைத்துக் கொண்டு என்ன பேசு பேசுகிறது இந்த பள்ளி போற குழந்தை.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் அஜித்தின் இரட்டை வெடி

அஜித் இப்போதெல்லாம் ஒரு படம் முடிந்த பிறகே அடுத்தப் படத்தில் நடிக்கிறார். விஜய்யைப் போல் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்தப் படத்தை முடிவு செய்து, உடனடியாக படப்பிடிப்புக்கு கிளம்புவதும் இல்லை. அதனால், வருடத்துக்கு ஒரு அஜித் படம் வந்தாலே அபூர்வம்.

இந்த வருடம் பிப்ரவரியில் அஜித் நடித்த, என்னை அறிந்தால் வெளியானது. இந்த மாதம் வேதாளம் திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரே வருடத்தில் அஜித்தின் இரு படங்கள் வெளியாகின்றன.
2007 -இல் அஜித்தின் ஆழ்வார், கிரீடம், பில்லா படங்கள் வெளியாயின. அதன் பிறகு இந்த வருடம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன.


விஷ்ணுவர்தனின் சரித்திரப் படத்தில் அஜித்…





யட்சனின் மாபெரும் தோல்விக்குப் பிறகு, எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து சரித்திர கதை ஒன்றை எழுதி வருகிறார் விஷ்ணுவர்தன். இது குறித்து அவரே தகவல் வெளியிட்டிருந்தது முக்கியமானது.

பிரமாண்டமாக தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் அஜித் நடிக்கயிருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது.

விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இரு படங்கள் இயக்கியிருக்கிறார். இரண்டுமே வெற்றிப் படங்கள். அதனை வைத்து, விஷ்ணுவர்தனின் சரித்திரப் படத்தில் அஜித் நடிப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது.

வதந்தி உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.